முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 10 பதக்கங்களை வென்ற காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு தமிழக டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநில அளவிலான “முதலமைச்சர் கோப்பை (CM Trophy) 2024” என்ற விளையாட்டுப் போட்டியை நடத்தியது. அதில் பங்கேற்ற தமிழ் நாடு காவல்துறையினர்  10 பதக்கங்களை வென்றனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர்களை  காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.