செங்குன்றம் அருகே பொங்கல் திருவிழாவையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட விளாங்காடுபாக்கம் ஊராட்சி பெரியதெரு, அவுசிங்போடு, அம்பாள் நகர் பகுதியில் விளாங்காடுபாக்கம் கிராம பொதுநல சங்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பில் 35ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விளாங்காடுபாக்கம் கிராம பொதுநல சங்கம், டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பில் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், கால்பந்து, கோலம், கிரிக்கெட், ஓட்டபந்தயம், மியூசிக்கல் சேர், கயிறுஇழுத்தல், பேச்சு, கவிதை, கட்டுரை, திரைப்பட பாடலுக்கான நடனம் உள்ளிட்டவை நடைபெற்றன.
செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட், புழல் ஒன்றிய முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் புழல் சரவணன், விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாரதிசரவணன் ஆகியோர் தலைமை தாங்கி விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.
இதில் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் நிலவழகிஇனியன், ரதிசீனிவாசன், கிராம தலைவர் முருகன், செயலாளர் பரிமளசெல்வம் மற்றும் நிர்வாகிகள் அருள்மொழிவர்மன், வில்லாளன், அண்ணாதுரை, திருக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சாமுவேல், ஈஸ்வரன், சீனிவாசன், அப்பன்ராஜ் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள், விழாகுழுவினர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.