சென்னை 1930 என்ற விழிப்புணர்வு நடைபயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு சார்பில் வரும் ஜனவரி 29- ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை மெரினா கடற்கரை சாலையில், சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இணையத்தில் சைபர் குற்றங்கள் தடுத்தல், பாதுகாப்பான ஆன்லைன் செயல்பாட்டு நடைமுறைகளை ஊக்குவத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் பிளாக்செயின் மூலம் இயக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.