செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பது குறித்து ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர், எஸ் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்…

ஆவடி காவல் ஆணையரங்கம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் பொன்னேரியில் செயல்பட்டு வருகிறது. இதனால் செங்குன்றம், வட பெரும்பாக்கம் அழிஞ்சி வாக்கம் சென்றம்பாக்கம் விளாங்காடு பக்கம் தீர்த்தங்கரையம்பட்டு புள்ளி லைன் பாடியநல்லூர் அலமாதி நல்லூர் கும்மனூர் சோழவரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளின் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளிக்க பொன்னேரி செல்வதற்கு மிக சிரமமாக உள்ளது என ஆவடி காவல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் கே சங்கர், கூடுதல் ஆணையர் எஸ் ராஜேந்திரன் ஆகியோர் செங்குன்றத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர் இந்த நிகழ்வில் செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் உள்ளிட்ட பலர் இருந்தனர்….