உயிரை பணயம் வைத்து கொலையை தடுத்து நிறுத்தி எதிரிகளை சாதுர்யமாக பிடித்த காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்பாராட்டு தெரித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் உயிரை பணையம் வைத்து ஒரு கொலையை தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 2 எதிரிகளை சம்பவ இடத்திலேயே பிடித்து, காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆத்தூர் காவல் நிலைய போலீசாரின் துணிச்சலையும் துரித நடவடிக்கையும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சங்கர் ஜிவால்  சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.