உத்தரப்பிரதேசத்தில் 4 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
உத்திரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின் ஜனா பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் முஸ்தபா காக்கா என்கிற கும்பலைச் சேர்ந்த ஹர்ஷத் என்பவரும் அவருடைய கூட்டாளிகள் மஞ்சு சதீஷ் உள்பட நால்வரும் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த மாநிலத்தில் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த அர்சத்தை பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூபாய் ஒரு லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரை இன்று சுட்டு பிடிக்க போலீசார் முற்பட்டபோது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் காவல்துறை ஆய்வாளர் சுனிலுக்கு குண்டு காயம் ஏற்பட்டது. அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருணாள் சிவில் லைன் காவல் நிலைய பொறுப்பாளர் பகவான் கூறியதாவது:- எஸ் டி எப் உத்திரபிரதேச போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. காவல்துறை ஆய்வாளர் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு குரு கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரின் உடல்நிலை குறித்து முழு விபரம் இன்னும் வரவில்லை.